September 10, 2026

இளையராஜாவுக்கு அந்த உரிமை உண்டு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அனுமதியின்றி பாடல் பயன்படுத்துவதைத் தடுக்க, பாடலை உருமாற்றம் செய்வதை தடுக்க இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தை. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் இளையராஜா இசையமைத்த ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’, ‘இளமை இதோ இதோ’ ஆகிய 3 பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன, ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை மைதிலி மூவீஸ் மேக்கர் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் தனது அனுமதி பெறாமல் பாடல்களை பயன்படுத்தியுள்ளதாக இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர் தியாகராஜன் தயாரிப்பு நிறுவனத்திற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை விலக்கக்கோரியும், இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தக்கோரியும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘குட் பேட் அக்லி’ படத்தில் இடம்பெற்ற ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’, ‘இளமை இதோ இதோ’ ஆகிய 3 பழைய பாடல்களை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,”அனுமதியின்றி பாடல் பயன்படுத்துவதை தடுக்க, பாடலை உருமாற்றம் செய்வதை தடுக்க இளையராஜாவுக்கு உரிமை உண்டு. இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை” என்று நீதிபதி தெரிவித்தார்.இடைக்கால தடையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்த நீதிமன்றம் பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

You may have missed