September 10, 2026

பரபரப்பான தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் : ஆளுநர், அதிமுக, பாஜக அடுத்தடுத்து வெளிநடப்பு

இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. வழக்கம் போல தமிழக ஆளுநர் ரவி அதிர்ச்சியுடன் வெளிநடப்பு, எதிர்க்கட்சிகளான பாஜக, அதிமுக வழிநடப்பு என பெரும் பரபரப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியுள்ளது.

​ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு:

வழக்கமாக ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. ஆனால், இன்று ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிக்காமல் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். இது ஆளுநரின் செயல் தான் என்று அரசியல் கட்சியினர் தரப்பில் சொல்லப்பட்டாலும் தேர்தல் சமயத்தில் ஆளுநரின் அதிருப்தி அடைந்துள்ளது, முக்கியமாக பார்க்கப்படுகிறது.

​தேசிய கீதத்திற்கு மரியாதை இல்லை:
சபை தொடங்கும் போதே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும், தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியதில் அதிருப்தி இருப்பதாகவும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உரையில் உடன்பாடில்லை:

அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் இருப்பதாகவும், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் போன்ற முக்கிய பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மைக் அணைப்பு புகார்:

தான் பேச முற்படும்போது தனது மைக் அணைக்கப்பட்டதாக ஆளுநர் அதிருப்தி தெரிவித்தார். இருப்பினும், இதைச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக மற்றும் பாஜக வெளிநடப்பு

ஆளுநர் வெளியேறியதைத் தொடர்ந்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

​சபாநாயகர் விளக்கம்:

சபையின் மரபுப்படி கூட்டத்தின் முடிவில்தான் தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும், ஆளுநரின் மைக் அணைக்கப்படவில்லை என்றும் சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

You may have missed