September 10, 2026

திருநெல்வேலி : பட்டப்பகலில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்ற நபர் கைது : போலீசார் விசாரணை

திருநெல்வேலி வெளியூர் பேருந்து நிலையம் அருகில் கள்ளத்தனமான மதுபானங்கள் விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பகுதியில், பகல் மற்றும் இரவு நேரங்களிலும் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் சுற்றிவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கங்கைகொண்டானை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

You may have missed