April 19, 2026

தவெக கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் : முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டாரா “புஸ்ஸி ஆனந்த்”..?

தவெக கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. கட்சியின் முழு பொறுப்பையும் புஸ்ஸி ஆனந்த் தரப்பிடம் ஒப்படைத்ததாக தவெக கட்சி தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மாமல்லபுரத்தில் இன்று காலை உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தவெக கட்சியின் செயல்வீர்ரகள் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தவெக கட்சியின் மாநில, மாவட்ட அளவிலான கட்சியின் செயல்வீரர்களை சந்தித்த உள்ளார். அவர்களுடன் வரும் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது? யாருடன் கூட்டணி அமைப்பது? போன்ற விஷயங்களை அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்தாலோசிக்க உள்ளார்.

மேலும், இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

ஒரு பக்கம் தவெக கட்சித் தலைவர் விஜய் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணையில் சிக்கியுள்ளார்.  மற்றொருபுறம் விஜய்யின்  “ஜனநாயகன்” படம் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையிலும் தொடர்ந்து அவர் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றி கழகத்தின் முழு பொறுப்பையும் “புஸ்ஸி ஆனந்த்” தரப்பிடம் ஒப்படைத்துள்ளதாக  தவெக தரப்பில் கூறப்படுகிறது.