September 10, 2026

“எனக்கு நயன்தாரா வேணும்..- சி.வி.சண்முகம்” – சிபிஎம் நிர்வாகியான பாலபாரதி கண்டனம்

முதல்வரின் ‘கனவைச் சொல்லுங்கள்’ திட்டம் குறித்து பேசியபோது, நடிகை நயன்தாரா வேண்டும் என்று முகம் சுளிக்கும் வகையில் குறிப்பிட்டு சி.வி. சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்த பேச்சு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

நயன்தாரா வேணும்..

சி.வி. சண்முகம் பேசியதாவது, ‘அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். மு.க.ஸ்டாலின் அதைவிட ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் என்கிறார். எனக்கு நடிகை நயன்தாரா  வேணும் இவர் நிறைவேற்றுவாரா? நடிகை நயன்தாராவை எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கள் என்று கேட்பார்கள் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?’ என்றார்

இந்நிலையில், இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே. பாலபாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

சி.வி. சண்முகம் தேர்தலில் நிற்பதற்கான உரிமையை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்றும், இது பெண்களை இழிவுபடுத்தும் செயல் என்றும் கூறினார். மேலும், இதற்கு தமிழ்நாட்டு பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

You may have missed