September 10, 2026

அப்பல்லோ ஐசியூவில் டாக்டர் ராமதாஸ்… அன்புமணி பரபரப்பு பேட்டி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸ்க்கு இதய சிகிச்சை நிபுணர்கள் இன்று காலை ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொண்டனர். இதனையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸை இன்று காலை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிக்க அன்புமணி மருத்துவமனைக்கு வந்தார்.

இதன் பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர். ” ராமதாஸ்க்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது. அவர் 6 மணி நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த பிறகு பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்.. தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் அவரை சந்திக்க முடியவில்லை. மேலும் ஆஞ்சியோ செய்யப்பட்டிருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் 6 மணி நேரத்திற்குப பிறகு வெளியே அழைத்து வரப்படுவார். 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர்” என்று அன்புமணி தெரிவித்தார்.

You may have missed