September 10, 2026

அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-கள் பாகமவில் இருந்து நீக்கம் – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

அன்புமணியின் 3 ஆதரவு எம்எல்ஏக்களை (MLA) ராமதாஸ் பாமக கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தை – மகன் மோதல்

பாமக கட்சி இரண்டு பிளவாக பிரிக்கப்கட்டுள்ளது. மகன் அன்புமணி ஒரு தரப்பும், தந்தை ராமதாஸ் ஒரு தரப்பும் என இரு தரப்பாக பாமக கட்சி பிரிந்துள்ளது.

இந்நிலையில் அன்புமணி வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி என அறிவித்துவிட்டார்.
ஆனால் ராமதாஸ் தரப்பு பாமக இன்னும் கூட்டணி பற்றி அறிவிக்கவில்லை. உண்மையில் பாமக கட்சி யாரிடம் உள்ளது? யார் உண்மையான தலைவர்? என்ற குழப்பத்தில் பாமக தொண்டர்களும்; நிர்வாகிகளும் உள்ளனர்.

3 எம்எல்ஏ-கள் கட்சிலிருந்து நீக்கம்

இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் இரு தரப்பும் மாறி மாறி எதிர் தரப்பினரை நீக்கி வருகிறார்கள். இந்த நிலையில், அன்புமணி ஆதரவாளர்களான மூன்று எம்.எல்.ஏக்களை பாமகவில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஷ்வரன் ஆகிய மூன்று பேரை பாமகவில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி மூன்று பேர் மீது ராமதாஸ் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

You may have missed