September 10, 2026

வசூல் சாதனையில் ‘பராசக்தி’ : மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு

பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தாண்டின் முதல் வெற்றி படமாக ‘பராசக்தி’ திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

சென்சார் சான்றிதழ் பிரச்னை

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தழுவி உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கை வாரியத்தால் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாட்டில் 600-க்கும் அதிகமான திரைகளில் இப்படம் திரையிடப்பட்டது. மேலும், பல நாடுகளிலும் படம் வெளியானது.

வசூல் சாதனை:-

‘பராசக்தி’ படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 27 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயனின் சினிமா கெரியரில் அதிகம் வசூலித்த அமரன் படம் முதல் நாளில் வசூலில் தமிழகத்தில் 16.50 கோடி ரூபாய் ஈட்டியது. அதேபோல் உலகம் முழுவதும் அமரன் ரூ. 24.70 கோடி வசூலித்திருந்தது.

விஜய் ரசிகர்களின் பேச்சு

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள்…, “இன்னும் ‘ஜனநாயகன்’ படம் வெளியாகவில்லை. வெளியான பிறகு பாருங்கள்! இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படம் இது? என்பது தெரியவரும் என சமூக வலைத்தளங்களில், விஜய் ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

You may have missed