September 10, 2026

அதிக தொகுதிகள் கேட்கும் பாஜக : குழப்பத்தில் இபிஎஸ் – தொடரும் இழுபறி..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக – பாஜக கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக நீடித்து வருகிறது.

அதிமுக மற்றும் பாஜக இடையே சென்னையில் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து நேற்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பாஜக கேட்கும் 30 இடங்களில் 20 முதல் 22 வரை மட்டுமே வழங்க முடியும் என எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் தொகுதிகள் ஒதுக்கீடு கணக்கில் அதிமுக- பாஜக இடையே மாற்றம் ஏற்படும் என்றும் மற்ற கூட்டணி கட்சிக்கு அதிமுக தரப்பில் தொகுதிகள் குறைத்து வழங்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவுக்கு 40 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

You may have missed