பாஜக பெண் நிர்வாகி குறித்து விமர்சனம்: யூடியூபர் முக்தார் அகமது கர்நாடகாவில் கைது…

பாஜக பெண் நிர்​வாகி குறித்து தரக்​குறை​வாக கருத்து தெரி​வித்த புகாரின்​பேரில் யூடியூபர் முக்​தார் அகமது கர்​நாட​கா​வில் கைது செய்​யப்​பட்​டார்.

பாஜக மாநில விளை​யாட்​டு, திறன் மேம்​பாட்​டுப் பிரிவு செயலாளராக இருப்​பர் அலிஷா அப்​துல்​லா. இவர் சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜிடம் சமீபத்​தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘எனக்​குப் பிறந்த இரட்​டைக் குழந்​தைகளை பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை​யுடன் தொடர்புபடுத்தி யூடியூபர் முக்​தார் அகமது, பாஜக முன்​னாள் பிரமுகர் திருச்சி சூர்யா ஆகியோர் இழி​வான கருத்​துகளு​டன் வீடியோ வெளி​யிட்​டுள்​ளனர். அவர்​கள் இரு​வரை​யும் கைது செய்து சிறை​யில் அடைக்க வேண்​டும்’ என்று கூறி​யிருந்​தார்.

இதையடுத்​து, காவல் ஆணை​யரின் உத்​தர​வின்​பேரில், சென்னை மத்​திய குற்​றப்​பிரி​வில் உள்ள சைபர் க்ரைம் போலீ​ஸார் விசாரணை நடத்​தினர். இதில், அலிஷா அப்​துல்லா புகாரில் தெரிவித்​திருந்​தது உண்மை என தெரிய​வந்​தது. இதையடுத்​து, திருச்சி சூர்யா, யூடியூபர் முக்​தாரை கைது செய்ய தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன.

திருச்​சி​யில் சூர்​யாவை (33) தனிப்​படை​யினர் கடந்த 4-ம் தேதி கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். தலைமறை​வான யூடியூப​ரான வேலூர் சத்​து​வாச்சாரியைச் சேர்ந்த முக்​தார் அகமதுவை (48) தேடி வந்​தனர்.

இந்​நிலை​யில், கர்​நாடக மாநிலம் மண்​டி​யா​வில் முக்​தார் அகமதுவை தனிப்​படை​யினர் நேற்று முன்​தினம் கைது செய்து சென்​னைக்கு அழைத்து வந்​தனர். இவர் மீது ஏற்​கெனவே 2 வழக்கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. சமூக வலை​தளங்​களில் அவதூறாக பேசி வரு​வது தொடர்​பாக இவர் மீது 20-க்​கும் மேற்​பட்ட புகார்​கள் பெறப்​பட்டு விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

சமூக ஊடகங்​கள், இணை​யதளங்​களில் பெண்​களை அவம​திக்​கும் வகை​யில் ஆபாச​மான, இழி​வான, சட்​ட​விரோத கருத்​துகளை வெளி​யிடு​வது கடுமை​யான குற்​றம். இது​போன்ற செயல்​களில் ஈடு​படு​வோர் மீது சட்​டப்​படி கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சென்னை காவல் ஆணை​யர்​ அமல்​ராஜ் எச்​சரித்​துள்​ளார்​.