ஜூன் முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! காலி பாட்டில் கையில் வாங்க வேண்டாம்..அமைச்சர் விக்னேஷ் உறுதி

டாஸ்மாக் கடைகளில் நீண்டகாலமாக இருந்து வரும் காலி மதுபாட்டில் வசூல் மற்றும் ஊழியர்கள் ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்திற்குள் காலி பாட்டில்களை ஊழியர்கள் கையில் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும், மதுபான உற்பத்தி நிலையங்களிலேயே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் அமைச்சர் விக்னேஷை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். பின்னர் ஊழியர்கள் மத்தியில் பேசிய அமைச்சர், டாஸ்மாக் துறை பல ஆண்டுகளாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த நிலையை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஜூன் மாதத்திற்குள் காலி மது பாட்டிலை ஊழியர்கள் கையில் வாங்க வேண்டிய தேவை இருக்காது. அது தொடர்பாக பேசிக்கொண்டு இருக்கின்றோம் எனவும், மது பாட்டிலில் ஊழியர்கள் ஸ்டிக்கர் ஒட்டாமல், மதுபாட்டில் தயாரிப்பின் போதே ஸ்டிக்கர் ஒட்டி வருவது போன்ற பணிகளை செய்து கொண்டிருக்கிறோம் என டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து நேற்று மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பேசினார். அப்போது, பார் நடத்துபவர்களை எந்தெந்த இடத்தில் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தெரியும். மதுவிலக்கு துறை தான் இருப்பதிலேயே புறக்கணிகப்பட்ட, ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட துறையாக இருக்கிறது.