திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்ட போது மூன்று பேர் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது எனவே அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களிடமிருந்து 2 லட்சத்து 43 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்க பணமும் 160 லாட்டரி சீட்டுகளை காவல்துறை பறிமுதல் செய்தனர்.
திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை திருவாரூர் சிறப்பு எஸ்.ஐ. கார்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசரணையில் கிடைத்த தகவலின் பேரில் சேகர் என்பவற்றின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமான லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ், கலியபெருமாள், சத்தியசாமி மற்றும் பண்ணீர் செல்வன் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், 3 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 10 வங்கி பாஸ்புக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

More Stories
ஒடிசாவிலிருந்து பைக்கில் 12 கிலோ கஞ்சா கடத்திய 15 வயது சிறுவன் கைது…
ராமநாதபுரத்தில் 7 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு! போலீஸ் விசாரணை…
அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க.. இயக்குநர் பாக்யராஜ் உடல் தகனம்!