September 22, 2026

இரவில் தூங்கி கொண்டிருந்த குழந்தையிடம் மோதிரம் வெள்ளி காப்பு திருட்டு…

வியாசர்பாடி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்(26), சென்னை மாநகராட்சி மண்டலம் 4ல் தற்காலிக ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். நேற்று இரவு 10 மணி அளவில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், காற்று வரவில்லை என கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கி உள்ளனர். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்து ஒரு நபர் ஓடி உள்ளார்.

அப்போது குழந்தையின் கையில் இருந்த 2 கிராம் தங்க மோதிரம் இரண்டு மற்றும் கையில் அணிந்திருந்த வெள்ளி காப்பு ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து முனீஸ் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.