தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம், தேவராஜ் நகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 4ம் தேதி, அடுத்தடுத்து 7 வீடுகளின் ஏசி காப்பர் கம்பியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். ஒரே நேரத்தில் பட்டப்பகலில் குடியிருப்பில் புகுந்து ஏசி வடத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வீடியோ ஆதாரத்துடன் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மர்ம நபர்கள் தைரியமாக தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

More Stories
தலைப்பு: தமிழகத்தில் சேவல் சண்டைக்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை: டிஜிபி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்
சென்னையில் கொடூரம்: தூங்கிக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை; மனைவி கைது!
மதுரையில் அடுத்தடுத்து அதிர்ச்சி: ஒரே நாளில் நிகழ்ந்த 3 படுகொலைகளால் மக்கள் பீதி!