சென்னை: தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிந்து, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்புவதையொட்டி, தாம்பரம் மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பயணத்தைச் சீரமைக்கவும் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் புதிய போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது.
கனரக வாகனங்களுக்கான கட்டுப்பாடுகள்: வருகின்ற ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு கனரக வாகனங்களுக்கு வழித்தட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
- தென் மாவட்ட வழித்தடம்: தென் மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு வழியாக தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள், செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலை – வாலாஜாபாத் – ஸ்ரீபெரும்புதூர் வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடைந்து சென்னைக்குள் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சிங்கப்பெருமாள் கோவில் வழித்தடம்: இவ்வழியாக வரும் வாகனங்கள் ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாகத் திருப்பி விடப்பட்டு, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்.
பயணிகளுக்கான ஆலோசனைகள்: புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்புவோர், நெரிசலற்ற பயணத்திற்காக கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை வழித்தடங்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் அனைவரும் இந்த மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு நல்கி, சீரான போக்குவரத்திற்கு உதவ வேண்டும் என தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!