September 11, 2026

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் சிங்கப்பெண் போலீசாரிடம் ஒப்படைத்தனர்…

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை அப்பகுதி பெண்கள் வெளுத்தெடுத்து சிங்கப்பெண் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த, எட்டு வயது சிறுமி தனது அண்ணனுடன் கடைக்குச் சென்று கொண்டிருந்தார். வரும் வழியில் அதே கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான விஜய கணபதி என்பவர், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் அண்ணன் உறவினர்களிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.

உடனே கும்பலாக சென்ற உள்ளூர் பெண்கள், விஜய கணபதியைப் பிடித்து அடித்து உதைத்து வெளுத்தெடுத்தனர். முகத்தில் குத்தி காயப்படுத்திய கிராம மக்கள், சிங்கப்பெண் அதிரடிப்படையினருக்கு போன் செய்து வரவழைத்தனர். அங்கு வந்த பெண் அதிகாரிகள் பெண்களிடம் சிக்கிய விஜயகணபதி மீட்டு கடுமையாகக் கண்டித்தனர். கேட்கும் கேள்விக்கு பதில் கூறாமல் திமிராகப் பதில் கூறிய விஜய கணபதியை ஜீப்பில் ஏற்றி நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.