ஈரானில் பிறந்த 44 வயதான பெண் தொழிலதிபரான ஷமீம் மாஃபி, அந்நாட்டுடன் தொடர்புடைய ஆயுத விற்பனை தொடர்புக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கிரீன் கார்டு வைத்திருக்கும் இவர், சூடானுக்கு ட்ரோன்கள், குண்டுகள் மற்றும் வெடிமருந்துகளை விற்பனை செய்ய கலிபோர்னியாவில் இருந்து இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளார். சூடானுக்கு அனுப்பப்படவிருந்த ஈரானியத் தயாரிப்பு ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட பேரங்களுக்கு ஷமீம் மாஃபி வழிவகுத்ததாகவும் இதிலிருந்து தப்பிக்க, அவர் ஓமனில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தைப் பயன்படுத்தியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More Stories
நடுக்கடலில் வெடித்து மூழ்கிய சரக்குக் கப்பல்: தண்ணீரில் மிதக்கும் ஐபோன்கள், வாசனைத் திரவியங்கள் – அள்ளி செல்லும் பொதுமக்கள்!
யாரும் வர வேண்டாம்” – லண்டனில் முதலமைச்சர் விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சி திடீர் ரத்து: காவல்துறை அறிவுறுத்தலால் தவெக வேண்டுகோள்!
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப 4,095 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத் துறை அறிவிப்பு!