இன்ஜினியரிங் கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து அவரை, சக மாணவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம், இப்ராஹிம்பட்டினத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உதய் என்ற மாணவர் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
யாதாத்ரி-புவனகிரி மாவட்டம், சௌட்டுப்பால் என்ற பகுதியைச் சேர்ந்தவரான உதய் தன்னுடன் கல்லூரியில், 3ஆம் ஆண்டு படிக்கும் சக மாணவி ஒருவருடன் நெருங்கி பழகி வந்தார். இந்த நிலையில் உதயும் அந்த மாணவியும் தில்சுக்நகரில் உள்ள கடைக்கு, டீ குடிப்பதற்காக சென்றனர்.
இருவரும் இப்ராஹிம்பட்டினம், திரும்பும் வழியில் உதய், மது பாட்டிலை வாங்கி இருக்கிறார். பின்னர் சாலையோரமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அவர் அந்த மதுவை அருந்தியுள்ளார். தனது தோழியான சக மாணவியை, உதய் கட்டாயப்படுத்தி மது குடிக்கச் செய்துள்ளார் . இதனால் அந்த மாணவி மது போதையில் இருந்தார்.
இதனை அடுத்து கல்லூரி அருகே உள்ள தங்கும் விடுதிக்கு அந்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு அறை ஒன்றில் வைத்து அந்த மாணவியை உதய் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் உதயை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை செய்து மிரட்டல்: தென்காசி கிளி ஜோதிடர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!
போக்சோ தவிர்த்த பிற வழக்குகளின் முதல் தகவல் அறிக்கை 48 மணி நேரத்தில் ஆன்லைனில் பதிவேற்றம்: சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் காவல்துறை தகவல்!