திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மதுமிதா. இவர் கடந்த பிப்ரவரி மாதம் கனகம்மாசத்திரம் பள்ளி மாணவிகள் தேர்வு எழுதி விட்டு ராமஞ்சேரி கிராமத்திற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது அங்கு வந்த கஞ்சா போதை இளைஞர்கள் மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசினர்.
தட்டிக் கேட்ட மாணவிகளை இளைஞர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் தாக்கியுள்ளனர். இதை கண்டித்து மாணவிகளின் பெற்றோர்கள் சாலை மறியலில் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் கஞ்சா போதை இளைஞர்களுக்கு ஆதரவாக மதுமிதா.என்ற பெண்ணும் மாணவிகளை தரக் குறைவாக பேசியதுடன் காவல் துறையினரையும் தகாத வார்த்தைகளால் பேசியதால் அவர் கைது செய்யப்பட்டார்.
மதுமிதா ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமாகி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கனகம்மா சத்திரம் பகுதியில் 2024 டிசம்பர் மாதம் 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய போக்சோ வழக்கில் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கயல்விழியன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அந்த இளைஞர் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் மீண்டும் அதே சிறுமியுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சிறுமி மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயுடன் மதுமிதாவும் உடன் வந்துள்ளார். அப்போது ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் கூறியதையடுத்து, ஸ்கேன் சென்டருக்கு உள்ளே செல்லும் போது மதுமிதாவும் உள்ளே சென்றுள்ளார்.
மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் சிறுமி மட்டும் உள்ளே வர அனுமதித்துள்ளனர். மேலும், சிறுமியின் தாயிடம் மதுமிதா குறித்து விசாரித்துள்ளார். “இவருடன் நீங்கள் எதற்காக வந்து உள்ளீர்கள் ? இவரை ஏற்கனவே வழக்கில் பார்த்துள்ளேன் என கேட்டுள்ளார்.
இதை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஸ்கேன் எடுத்து முடித்து வெளியே வந்த நிலையில் இதுகுறித்து மதுமிதாவிடம் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மதுமிதா அங்கிருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவரிடம் தகாத வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனையின் முதல்வர் மோகன் காந்தியிடம் மதுமிதா ரகளையில் ஈடுபட்டது குறித்து தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து உதவி மருத்துவர் சிவகாமி சுந்தரி திருவள்ளூர் நகர காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் நகர காவல் துறையினர் சிவகாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் வைத்தனர். ஏற்கனவே மதுமிதா கனகம்மா சத்திரத்தில் ரகளையில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட நான்கு வழக்குகளில் சிறைக்கு சென்று வந்தது தெரிய வந்தது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாலங்காடு காவல் நிலையத்தில் அமர்ந்து புகார் எழுதுவது போன்று ரீல்ஸ் வெளியிட்டு அந்த ரீல்ஸில் ” ஒருத்தனையும் விடமாட்டேன் ” என்ற வாசகங்களை அடக்கி, அதை ரீல்சாக வெளியிட்டுள்ள சம்பவமும் தெரிய வந்துள்ளது

More Stories
சப்-இன்ஸ்பெக்டர் மீது நாயை ஏவிக் கடிக்க வைத்த கொடூரம் – தம்பதி அதிரடி கைது!
போலி பயிற்சி மையங்களை தொடங்கி அரசு வேலை தருவதாக கூறி ரூ.5.3 கோடி மோசடி:
பதிவு செய்த அன்றே கையில் பத்திரம்… மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்…