May 5, 2026

டோட்டல் ஃபேமிலி எம்எல்ஏ தான்! அரசியலில் சாதித்த லாட்டரி மார்ட்டின் குடும்பம்!

2026 தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் நடக்க வைத்திருக்கும் ஒரு விஷயம் பிரபல லாட்டரி அதிபராக மார்ட்டின் ஒட்டுமொத்த குடும்பமும் வென்றிருப்பது தான். மூவரும் வெவ்வேறு கட்சிகளில் பயணித்து நிலையில் சட்டமன்றங்களை அலங்கரிக்க போகின்றனர். ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றி கழகத்தின் மூலமும், லீமா ரோஸ் மார்ட்டின் அதிமுக மூலமும், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் தனது கட்சியின் மூலம் சட்டசபைக்குள் நுழைய இருக்கின்றனர்.

பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழக சட்டசபை தேர்தலும் புதுச்சேரி சட்டசபை தேர்தலும் நடந்து முடிந்திருக்கிறது. தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது வரை வெளியான முடிவுகளின்படி நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலையில் இருக்கிறது.

அடுத்த ஆட்சி தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிதான் என்பது உறுதியாகி இருக்கிறது. ஆளும் கட்சியான திமுக சுமார் 70 தொகுதிகளிலும், அதிமுக சுமார் 50 தொகுதிகளுக்குள்ளும் சுருங்கி உள்ளது. ஆனால் புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட்ட நிலையில் இரண்டு தொகுதிகளில் மட்டும் தான் வென்றது.

அந்த மாநிலத்தில் என்ஆர் காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பாஜக நான்கு தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதியிலும் வென்றுள்ள நிலையில் மீண்டும் என்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. மேலும் திமுக 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதிகளிலும் வென்றுள்ளது.

இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியாக பார்க்கப்படுவது புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சி என்ற கட்சியை தொடங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வென்றது தான். அவர் மட்டுமல்ல அவரது குடும்பமே அங்கு வென்றுள்ளது. பிரபல லாட்டரி அதிபராக மார்ட்டின் மகன் தான் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ட்டினின்ன் மனைவி லீமாரோ லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வந்திருக்கிறார். அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றிருக்கிறார்.