விஜய் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவார் என்று கணித்தபோது பலரும் நம்பவில்லை. தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 இடங்களை வெல்லும் என்று Axis My India கணித்திருந்தது. இந்நிலையில் இந்த எக்சிட் போல் முடிவு தற்போது உண்மையாகியுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களை தன்வசப்படுத்தியுள்ளது.
பெரும்பாலான ஊடகங்களும், கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் திமுக கூட்டணிக்குச் சாதகமாகவே முடிவுகள் அமையும் என்றும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிகபட்சமாக 25 இடங்களை மட்டுமே பிடிக்கும் என்றும் தெரிவித்திருந்தன. ஆனால், தவெக 98 முதல் 120 இடங்கள் வரை கைப்பற்றும் என்ற ஆக்சிஸ் மை இந்தியாவின் அதிரடி கணிப்பு இப்போது வாக்கு எண்ணிக்கை நிலவரங்களில் அப்படியே பிரதிபலித்துள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் இடங்கள் குறித்த கணிப்பில் சிறு மாற்றங்கள் இருந்தாலும், விஜய்யின் விஸ்வரூபத்தை முன்கூட்டியே துல்லியமாகக் கணித்ததன் மூலம் ‘ஆக்சிஸ் மை இந்தியா தனது நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றி கழகம், தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு எதிர்பாராத வெற்றியைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யக்கூடும் என்று ஆக்சிஸ் மை இந்தியா எக்சிட் போல் கருத்துக் கணிப்பு கணித்திருந்தது. தவெக 98 முதல் 120 இடங்கள் வரை கைப்பற்றக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

More Stories
டோட்டல் ஃபேமிலி எம்எல்ஏ தான்! அரசியலில் சாதித்த லாட்டரி மார்ட்டின் குடும்பம்!
“ஃபீனிக்ஸ் பறவை போல் அதிமுக மீளும்” – எடப்பாடி பழனிசாமி…
புதுச்சேரியில் மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி: 5-வது முறையாக முதல்வர் ஆகிறார் ரங்கசாமி!