April 26, 2026

மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதிகளில் பள்ளி மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. விளையாட்டு விடுதிகளில் 6ம் வகுப்பு, 7ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு, மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் மே 3ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

தமிழ்நாடுசுற்றுலா

மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டி மாணவர்களுக்கு மே 7ம் தேதி காலை 7 மணிக்கும், மாணவிகளுக்கு மே 8ம் தேதி காலை 7 மணிக்கும் நடைபெற உள்ளது. கூடுதல் விபரங்கள் பெற மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.