சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரிடம் சக மாணவர் ஒருவர் நட்பாக பழகியுள்ளார். திடீரென ஒருநாள் தனது அண்ணனின் பிறந்தநாளை கொண்டாட உள்ளோம் என்றும், அதில் கண்டிப்பாக நீ கலந்து கொள்ள வேண்டும் எனவும் கூறி வற்புறுத்தியுள்ளார். இதனால் சக மாணவன் அழைப்பதால் அதை தட்டிக்கழிக்க முடியாமல் மாணவியும் நம்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், வீட்டில் பிறந்த நாள் விழா நடக்கும் என்று பார்த்தால் மாணவர்கள் தங்கிய அறையில் முன்னாள் மாணவர்கள் பலரும் இருந்துள்ளனர். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி அங்கிருந்து கிளம்ப தயாராகியுள்ளார். ஆனால், அவர்கள் வலுக்கட்டாயமாக மாணவியை இருக்க வைத்துள்ளனர். அங்கு அதே பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்களும் இருந்துள்ளனர்.
அப்போது மாணவிக்கு குளிர்பானம் கொடுக்கப்பட்டுள்ளது. குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் மாணவி திடீரென மயக்கம் அடைந்துள்ளார். தொடர்ந்து மயக்கம் தெளிந்த பின்னர் தனக்கு நேர்ந்த கொடூரத்தை உணர்ந்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். உடன் வந்த சக மாணவன் அந்த மாணவி குடித்த குளிர்பானத்தில் மயக்க மருந்தை கொடுத்துள்ளார். அத்துடன் அவருக்கு தெரியாமல் போதை சாக்லேட்களையும் கொடுத்துள்ளனர்.
ஆபத்தை உணராமல் சக மாணவர் மீதான நம்பிக்கையால் அதை உட்கொண்டுள்ளார். மாணவி மயக்க நிலைக்கு சென்றதும் 5-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த கொடூர செயலை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடூரத்தை வெளியே சொன்னால் அந்தரங்க வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, வீடியோவை காட்டி மாணவியின் தோழிகள் மூன்று பேரையும் வலுக்கட்டாயமாக அழைத்து அடாவடி மாணவர்கள் அத்தமீறியுள்ளனர். அது தொடர்பான வீடியோக்களை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாணவியை பல்கலைக்கழக நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது. சக மாணவனை நம்பிச் சென்று தனது எதிர்காலமே கேள்விக்குறியானது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி சங்கர் நகரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், விஷால், விஜய், அஸ்வின் உட்பட 5 பேர் மீது புகார் அளித்தும் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெயருக்கு விஷால் என்ற மாணவனிடம் மட்டும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உடன் படிக்கும் மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி, மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், தங்களது பல்கலைக்கழகத்தில் போதை காலாச்சாரம் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அங்கு படிக்கும் சில மாணவிகளுக்கு தன்னைப் போல் போதைப் பொருள் கொடுத்து உடன் படிக்கும் மாணவர்களே பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்று மாணவிகளிடம் அத்துமீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். கோவையை தலைமையிடமாக கொண்ட என்ஜிஓ அமைப்பு மூலம் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நீதி கிடைக்க வேண்டி போராடி வருகிறார்.
கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளை நம்ப வைத்து அவர்களின் வாழ்க்கையில் விளையாடும் கொடூர எண்ணம் கொண்ட மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாறாக, புகார் கொடுத்த மாணவியையே பல்கலைக்கழகம் நீக்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பல்கலைக்கழக மாணவியை சக மாணவர்களே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
மலைப்பகுதியில் வாலிபர் அடித்து கொலை…
ஊராட்சி பள்ளியில் புகுந்து கணினி, ஹார்டிஸ்க் திருட்டு…
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும்: தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு…