இரண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்த பயனாளிகளுக்குத் தற்போது முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன் தகவல் தெரிவித்துள்ளார்.
மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, சென்னை மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்த பயனாளிகளுக்குத் தற்போது முதிர்வுத் தொகை பெற்று வழங்கும் பொருட்டு, இதுவரை இத்திட்டத்தில் பதிவு செய்து முதிர்வுத் தொகை கிடைக்காத 18 வயது நிரம்பிய பயனாளிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வைப்பு நிதி பத்திரம், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம், ஆகிய ஆவணங்களோடு மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், சிங்காரவேலர் மாளிகை, 8-வது தளம், இராஜாஜிசாலை, சென்னை அலுவலகத்திலுள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் மற்றும் நகர்நல அலுவலர்களிடம் முதிர்வுத் தொகைக்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

More Stories
நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து…
காதல் திருமணத்துக்கு தடையாக இருந்த தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன்:
பயங்கர ஆயுதங்களுடன் பிறந்த நாள் கொண்டாடி ரீல்ஸ் வெளியிட்ட ரவுடி கைது: