வேறு ஒருவரின் வீட்டை குத்தகைக்கு விட்ட ஐ.டி பெண் ஊழியர் கைது…

வீட்​டின் உரிமை​யாளர் போல நடித்​து, வேறு ஒரு​வரின் வீட்டை குத்​தகைக்கு விட்டு பண மோசடி செய்த வழக்​கில், ஐ.டி. பெண் ஊழியர் கைது செய்​யப்​பட்​டார்.

சென்​னை, ஓட்​டேரி பகு​தி​யைச் சேர்ந்​தவர் குமார​ராஜா (54). குத்​தகைக்கு வீடு தேடி கொண்​டிருந்​தார். அப்​போது, சென்னை நம்​மாழ்​வார்​பேட்​டையைச் சேர்ந்த சங்​கர் என்​பவர் நம்​மாழ்​வார்​பேட்​டை, சுப்​ப​ராயன் மெயின் தெரு​வில் உள்ள வீடு ஒன்றை காண்​பித்​து, இந்த வீடு என்​னுடையது​தான்.

ரூ.4.5 லட்​சத்​திற்கு குத்​தகைக்கு விட உள்​ள​தாக தெரி​வித்​தார். இதையடுத்​து, குமார​ராஜா கடந்த பிப். 13-ம் தேதி குத்​தகை ஒப்​பந்​தம் போட்​டு, சங்​கரின் வீட்​டில் அவரது மகள் நந்​தினி (25) முன்​னிலை​யில் ரூ.4.5 லட்​சம் கொடுத்​தார்.

பின்​னர், சங்​கர் வீட்டை ஒப்​படைக்​காமல் காலம் தாழ்த்​தி​னார். அதன் பின்​னர்​தான், அந்த வீட்​டின் உரிமை​யாளர் சங்​கர் இல்லை என தெரிய வந்​தது. இதையடுத்​து, கொடுத்த பணத்தை திருப்பி கேட்​ட​போது, சங்​கர் திருப்பி தரவில்​லை.

இதுகுறித்​து, குமார​ராஜா தலைமை செயலக குடி​யிருப்பு காவல் நிலைய குற்​றப்​பிரி​வில் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

இதில், பண மோசடி நடை​பெற்​றது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, சங்​கரின் மகள் நந்​தினியை போலீ​ஸார் நேற்றுகைது செய்​தனர். விசா​ரணை​யில் நந்​தினி ஐ.டி. நிறு​வனத்​தில் வேலை செய்து வரு​வது தெரிய வந்​தது. தலைமறை​வாக உள்ள சங்​கரை போலீ​ஸார் தொடர்ந்து தேடி வரு​கின்​றனர்.