சேலம் நிலத்தகராறு :விவசாயி வெட்டிக்கொலை : சகோதரர்கள் கைது…

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, தலைச்சோலை கிராமம், பாசிப்பள்ளம் பகுதியில் வசித்து வருபவர் முருகன் (வயது 37). இவர் விவசாய கூலித் தொழிலாளி ஆவார். இவரின் சகோதரர் செல்வகுமார் (வயது 40). இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட ஆண்டுகளாக நிலத்தகராறு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனிடையே, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, செல்வகுமார், அவரின் மகன்கள் அமர்நாத் (வயது 26), தினேஷ் குமார் (வயது 23) ஆகியோர் முருகனை சரமாரியாக கத்தியால் வெட்டி இருக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த முருகன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த தினேஷ்குமார், அமர்நாத் ஆகியோரை கைது செய்தனர். செல்வகுமாரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.