பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் வந்தால், அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க பறக்கும் படை துணை ஆட்சியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசு மதுவை விற்பனை செய்கிறது. மாநிலம் முழுதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் 5, 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவது தொடர்கிறது. இதற்கு தற்போது பொறுப்பேற்றுள்ள த.வெ.க தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று மது பிரியர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், மதுக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்றால் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்கத் தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வருகின்றன. கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதை தடுக்கத் தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

More Stories
திருப்பூர் அருகே சாலை விபத்து: காவலர் உள்பட 6 பேர் உயிரிழப்பு
வேறு ஒருவரின் வீட்டை குத்தகைக்கு விட்ட ஐ.டி பெண் ஊழியர் கைது…
தொடங்கப்பட்டது முதல்வர் விஜய் அறிவித்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம்…