புரட்சி அதிமுக-வின் முதன்மை செயலாளரான பெங்களூரு வா.புகழேந்தி தாக்கல் செய்திருந்த வழக்கில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு எதிராக, எடப்பாடி பழனிசாமி அவதூறு பிரச்சாரம் மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் அவதூறாக பேசியதாக கூறி, எடப்பாடி பழனிசாமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

More Stories
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு – 4 முனை போட்டி தீவிரம்!
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்படுகிறார் முதல்வர் விஜய்: பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணம்!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்