அதிமுக–தேமுதிக இடையே புதிய சர்ச்சை: ஆதாரம் வெளியிட்ட பிரேமலதா
திருவண்ணாமலை:
தேமுதிக பொதுச்செயலாளர் , அதிமுக பொதுச்செயலாளர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, தேமுதிகக்கு 5 மக்களவைத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் வழங்கப்படும் என எழுத்து மூலம் உறுதி அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தில் இபிஎஸ் கையெழுத்திட்டுள்ளதாக கூறிய பிரேமலதா, அதற்கான ஆவணத்தையும் பொதுமக்கள் முன் வெளியிட்டார். “தேமுதிக சிறிய கட்சி எனில், ஏன் ராஜ்யசபா இடம் வழங்கப்படும் என எழுத்து மூலம் உறுதி அளித்தார்கள்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
சமீபத்தில் ராஜ்யசபா இடம் குறித்து எந்தவித வாக்குறுதியும் வழங்கப்படவில்லை என இபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் இந்த ஆவணம் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் அதிமுக – தேமுதிக இடையே புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியலில் இது முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.






