திருவொற்றியூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இரவு மாட்டு மந்தை மேம்பாலம் அருகிலுள்ள மருந்து கடைக்கு மாத்திரை வாங்க சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த நபர் ஒருவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
மாணவி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே அந்த நபர் பைக்கில் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காலடிப்பேட்டை மேட்டு தெருவை சேர்ந்த மியூசிக் ஆசிரியர் பீட்டர் (30) என்பவரை நேற்று கைது செய்து, விசாரணைக்கு பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

More Stories
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு அதிகாரப்பூர்வ விளக்கத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டனர் !
பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீச்சு: தஞ்சை, பந்தலூரில் பரபரப்பு — 7 பேர் கைது
விநாயகர் சதுர்த்தி எதிரொலி: பக்தர்கள் வருகை குறைந்து வெறிச்சோடிய திருத்தணி முருகன் கோவில்