கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் பகுதியைச் சேர்ந்தவர் மேரிக்குட்டி (70). இவரது மகன்கள் ரெஜி (54), சஜி (43). இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. கடந்த 1 மாதத்திற்கு மேலாக மேரிக்குட்டியையும், ரெஜியையும் காணாததால் பக்கத்து வீட்டினர் இது தொடர்பாக சஜியிடம் விசாரித்தனர். ஆனால், அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.
இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் பக்கத்து ஊரில் வசிக்கும் மேரிக்குட்டியின் மகள் சினிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் நெடுங்கண்டம் போலீசில் தாய், அண்ணன் காணாமல் போனது குறித்து புகார் செய்தார். சஜி தலைமறைவானார். இந்த நிலையில் வீட்டுக்கு பின்புறம் புதைக்கப்பட்ட நிலையில் 2 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சஜி அருகிலுள்ள மலைப்பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவரை போலீசாரை் கைது செய்தனர். விசாரணையில் தாய், அண்ணன் இருவரையும் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு அதிகாரப்பூர்வ விளக்கத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டனர் !
பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீச்சு: தஞ்சை, பந்தலூரில் பரபரப்பு — 7 பேர் கைது
ரூ.20,000 கடனுக்காக தாய், சேய் உயிரிழப்பதா? – கொத்தடிமை முறையை ஒழிக்க வேல்முருகன் ஆவேசக் கோரிக்கை!