விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ கூத்தாண்டவர் கோவிலின் சித்திரைத் திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மாவட்டத்துக்கு திரளாக வந்து கொண்டிருக்கின்றனர்.
மகாபாரத இதிகாசத்தில் இடம்பெறும் அரவான் பலியிடும் நிகழ்வை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த தனித்துவமான திருவிழா, திருநங்கைகளின் ஆன்மீக மற்றும் சமூக அடையாளத்தை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகும். சென்னை, பெங்களூரு, ஆந்திரப் பிரதேசம், கேரளா, மும்பை உள்ளிட்ட இடங்களிலிருந்து ஏராளமான திருநங்கைகள் வருகை புரிந்துள்ளதால், விழுப்புரம் நகரில் உள்ள விடுதிகள், லாட்ஜ்கள் மற்றும் திருமண மண்டபங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. நகரின் முக்கிய சாலைகளில் திருநங்கைகளின் கூடுகை அதிகரித்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தியுள்ளது.

More Stories
போதைப் பொருட்களுடன் 22 புத்த துறவிகள் கைது…
திமுக நிர்வாகி உள்பட இருவர் உயிரிழப்பு…
கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு…