September 10, 2026

மதுரையில் அதிர்ச்சிசம்பவம்…. வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து…

தமிழ்நாட்டில் இன்று (ஏப்.23) காலை 7 மணிக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்களிப்பதற்காக பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை அடுத்த திருமங்கலம் மேல்கோட்டை வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாரிமுத்து என்பவர் மீது பாலமுருகன் என்பவர் கத்தியை வீசியுள்ளார். அப்போது கத்தி தவறுதலாக மாரிமுத்து அருகே நின்றிந்த பெண்ணிண் காலில் குத்தி காயம் ஏற்பட்டது. முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்த போது தவறுதலாக பெண் மீது கத்தி பட்டுள்ளது. போலீசார் பாலமுருகனை கைதுசெய்துள்ளனர்.

You may have missed