மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135B-ன் படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது பிற அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வாக்களிப்பதற்காக ஊதியத்துடன் கூடிய விடுமுறை
தேர்தலையொட்டி நாளை தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளின் நேரடிச் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படும். மேலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்களிப்பதை எளிதாக்கும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை (Paid Holiday) வழங்கப்பட வேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135B-ன் படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது பிற அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வாக்களிப்பதற்காக ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெற உரிமை உண்டு. வாக்குப்பதிவு நாளில் வாக்களிக்காமல் இருப்பதை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள் நாளை (ஏப்ரல் 23) மூடப்பட்டிருக்கும்.
இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் வகையில் வியாழக்கிழமை (ஏப்.23) ஒரு நாள் மட்டும் கோவை குற்றாலம் அருவி மூடப்படுகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று வெள்ளியங்கிரி மலைக்கு புதன்கிழமை மாலை 6 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தடை செய்யப்பட்ட நேரத்தில் கோவை குற்றாலம் அருவி, வெள்ளியங்கிரி மலைக்கு மக்கள் யாரும் செல்ல முயற்சி செய்ய வேண்டாம். இந்த தடை மீறி குற்றாலம் அருவி, வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதை தடுக்க வனத் துறையின் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனா்.

More Stories
‘டெல்லி கஜக போராட்டத்தில் ஆனி ராஜா உள்ளிட்டோர் மீது தாக்குதல்…’ – இந்திய கம்யூ. கண்டனம்…
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் பெங்களூருவில் ரூ.75,000-க்கு விற்பனை…
மதுரையில் வறுமையால் சாலையில் பெண் தீக்குளிப்பு: 90% காயங்களுடன் தீவிர சிகிச்சை;