கர்நாடக மாநிலம் பயதரஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சனநகரில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 27 வயதான கிரண் என்பவர் ராஜாஜிநகரில் உள்ள பாஷ்யம் சர்க்கிள் அருகே கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இதே கடையில், பிரேமா என்பவரும் பணிபுரிந்துள்ளார். இருவரும் ஒரே கடையில் வேலை பார்த்ததால் ஆரம்பத்தில் நட்பாகப் பழகியுள்ளனர். பின்னர், அது இருவருக்குள்ளும் காதலாக மாறியுள்ளது என போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், சம்பவத்தன்று தெற்கு பெங்களூருவின் அஞ்சனபுராவில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்தபோது பிரேமா இருந்தபோது காதலர் கிரணை, அழைத்துள்ளார்.
கிரண் அங்கு சென்றதும், ’மேற்கத்திய பாணியில் உன்னிடம் காதலைச் சொல்லப் போகிறேன்’ எனக் கூறி கிரணின் கண்களைக் கட்டியதுடன், அவருடைய கைகால்களையும் கயிற்றால் கட்டிப் போட்டுள்ளார். பின்னர், தான் முன்னரே ஏற்பாடு செய்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை அவர்மீது ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், காதலர் கிரண், சமீபகாலமாக தன்மீது போதுமான கவனம் செலுத்தவில்லை என்றும், தன்னை திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்றும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாலேயே அவரை எரித்துக் கொன்றதாக பிரேமா தெரிவித்திருப்பதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், காதலரை தீவைத்து எரித்த சம்பவத்தையும் தனது மொபைல் போனில் அவர் பதிவு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

More Stories
தமிழகத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை மூடல்! வாக்களிப்பதற்காக ஊதியத்துடன் கூடிய விடுமுறை
ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்…..கார், ஆம்னி பஸ் மோதல்.. 3 பேர் பலி!
தேர்தலை முன்னிட்டு மதுபானக்கடை, பட்டாசு கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு..!