April 20, 2026

அறந்தாங்கி நிஷா பகீர் குற்றச்சாட்டு! ரியாலிட்டி ஷோவில் நடந்தது என்ன? –

சோசியல் மீடியா மூலம் பிரபலமாகி “நடிப்பு அரக்கன்.. வாட்டர் மெலன் ஸ்டார்” எனத் தன்னைத்தானே புகழ்ந்து அதன் மூலம் பிக்பாஸ் வரை சென்றவர் யூடியூபர் திவாகர். ஷூட்டிங் ஸ்பாட்டில் பெண் ஒருவரை யூடியூபர் திவாகர் தரக்குறைவாக பேசியதை தட்டிக்கேட்டதால்தான்.. தங்கள் மீது பொய் புகார் அளித்திருப்பதாக மாகாபா ஆனந்த் விளக்கம் அளித்திருந்த நிலையில், தற்போது அச்சம்பவம் குறித்து பெண்கள் சிலர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. யூடியூபர் திவாகருக்கு எதிராகக் கிளம்பியுள்ள எல்லைமீறல் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

லேட்டஸ்டாக சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்த தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். அப்பொழுது கானா வினோத், மாகாபா ஆனந்த், புகழ் உள்ளிட்டோர் தன்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் வேண்டுமென்றே பிரச்சினை செய்து மதுபோதையில் தன்னை இரும்பு ராடால் தாக்கி காயப்படுத்தியதாக, திவாகர் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இப்புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் ஆஜராகி போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் பெண் ஒருவரிடம் எல்லைமீறிய திவாகர் அதை தட்டிக்கேட்டதால் தங்கள் மீது பொய் புகார் அளித்திருப்பதாகப் பதிலுக்கு இவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதனிடையே, தனியார் தொலைக்காட்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன என்பது குறித்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே வீடியோ வெளியிட்டு திவாகர் மீது பல பகீர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

ரியாலிட்டி ஷோவில் தன் தோல் மீது கைபோட்டு மிகவும் மோசமாக திவாகர் நடந்து கொண்டதாகவும், அதேபோல் மற்ற பெண் போட்டியாளர்களிடம் அவர் மிகவும் அருவருப்பாக நடந்து கொண்டதாகவும் அறந்தாங்கி நிஷா குற்றம் சாட்டியுள்ளார். அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு தம்பதியும் திவாகர் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் திவாகர் பொய் புகார் அளித்தாரா?

அவர் மீதான குற்றச்சாட்டை மறைக்க தன்னை தட்டிக்கேட்டவர்கள் மீது போலீசில் வேண்டுமென்றே புகார் அளித்தாரா? உள்ளிட்ட கோணங்களில் சந்தேகங்கள் எழுந்துள்ளது. போலீஸ் விசாரணையே அதை உறுதிப்படுத்தும். ரியாலிட்டி ஷோவில் வேண்டுமானால் இவர்கள் பிரபலமாக இருக்கலாம் ஆனால் ரியாலிட்டி லைஃபில் குற்றம் செய்தால் காவல்துறை இவர்கள் மீது நடவடிக்கைம் எடுக்குஎன்பதை மறந்து விடக்கூடாது.