தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்ற பிறகு, அதிபர் லீ இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரிய அதிபர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை என்பதால், இந்தச் சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டெல்லி வந்தடைந்த தென்கொரிய அதிபருக்கு இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ராஜ்காட்டிற்குச் சென்று மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அதிபர் லீ மரியாதை செலுத்தினார். இந்தப் பயணத்தின் மிக முக்கியமான நிகழ்வாக, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஹைதராபாத் இல்லத்தில் இருதரப்பு உச்சிமாநாடு நடைபெறுகிறது.

More Stories
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மீதான மக்களின் நம்பிக்கை, 37 சதவீதமாக சரிந்துள்ளதாக கருத்துக்கணிப்பு
கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்:
மகனின் கண் முன் பழங்குடியின பெண் கூட்டு பலாத்காரம்: