ஈரானில் பிறந்த 44 வயதான பெண் தொழிலதிபரான ஷமீம் மாஃபி, அந்நாட்டுடன் தொடர்புடைய ஆயுத விற்பனை தொடர்புக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கிரீன் கார்டு வைத்திருக்கும் இவர், சூடானுக்கு ட்ரோன்கள், குண்டுகள் மற்றும் வெடிமருந்துகளை விற்பனை செய்ய கலிபோர்னியாவில் இருந்து இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளார். சூடானுக்கு அனுப்பப்படவிருந்த ஈரானியத் தயாரிப்பு ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட பேரங்களுக்கு ஷமீம் மாஃபி வழிவகுத்ததாகவும் இதிலிருந்து தப்பிக்க, அவர் ஓமனில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தைப் பயன்படுத்தியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More Stories
மலேசியாவில் திடீரென தீ விபத்து… ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து சேதம்!
பசுமை எரிசக்தி, தொழில்நுட்ப துறைகளில் புதிய ஒப்பந்தங்கள்….இந்தியா – தென்கொரியா மெகா கூட்டணி!
வரலாற்றின் துரோகக் கருப்புப் பக்கங்களில் ஸ்டாலின்!” – அன்புமணி ராமதாஸ் வெடித்த அதிரடி அறிக்கை!