September 10, 2026

மதுரை மத்திய தொகுதியில் திமுக அமைச்சருடன் மோதும் இயக்குநர் சுந்தர்.சி – பின்னணியில் செயல்படுவது ‘நடிகை குஷ்பூ’வா…

இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர்.சி  அரசியலில் களமிறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்து உள்ளன.

​தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், சுந்தர்.சி அவர்கள் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அறிவிப்பின்படி, அவர் மதுரை மத்திய (Madurai Central) தொகுதியில் போட்டியிடுகிறார்.

இரட்டை இலை சின்னத்தில் போட்டி:

 தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஏ.சி சண்முகத்தின  “புதிய நீதிக்கட்சி” சார்பில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கூட்டணியில் உள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி வேட்பாளர்:

மதுரை மத்திய தொகுதியில் தற்போது அமைச்சராக இருக்கும் திமுகவின் பழனிவேல் தியாகராஜன்  அவர்களை எதிர்த்து சுந்தர்.சி போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

​பின்னணியில் குஷ்பு..?

​சுந்தர்.சி-யின் மனைவி, பிரபல நடிகை குஷ்பு, ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவராகவும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். குஷ்புவின் அரசியல் ஈடுபாட்டைத் தொடர்ந்து, இப்போது சுந்தர் சியும் நேரடியாகத் தேர்தலில் போட்டியிடுவது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மத்திய தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாறியிருப்பதால், வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவு மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may have missed