2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக, அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தற்போது, அக்கட்சி 23 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பெரும்பாலானோர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளாக உள்ளனர்.

  • எடப்பாடி கே. பழனிசாமி –  எடப்பாடி (அதிமுக பொதுச்செயலாளர்)
  • கே. பி. முனுசாமி  – வேப்பனஹள்ளி (துணைப் பொதுச்செயலாளர்)
  • திண்டுக்கல் சி. சீனிவாசன் – திண்டுக்கல் (அதிமுக பொருளாளர்)
  • நத்தம் ஆர். விஸ்வநாதன் – நத்தம் (முன்னாள் அமைச்சர்)
  • எஸ். பி. வேலுமணி – தொண்டாமுத்தூர் (முன்னாள் அமைச்சர்)
  • பி. தங்கமணி – குமாரபாளையம் (முன்னாள் அமைச்சர்)
  • டி. ஜெயக்குமார் – ராயபுரம் (முன்னாள் அமைச்சர்)
  • சி. வி. சண்முகம் – மயிலம் முன்னாள் அமைச்சர் (விழுப்புரத்திலிருந்து மாற்றம்)
  • செல்லூர் கே. ராஜு  – மதுரை மேற்கு  (முன்னாள் அமைச்சர்)
  • சி. விஜயபாஸ்கர் – விராலிமலை (முன்னாள் அமைச்சர்)
  • கே. பி. அன்பழகன் – பாலக்கோடு (முன்னாள் அமைச்சர்)
  • ஓ. எஸ். மணியன்  – வேதாரண்யம் (முன்னாள் அமைச்சர்)

​முக்கிய வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் :-

​முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 23 பேரில் 21 பேர் முன்னாள் அமைச்சர்கள். மக்களிடையே நன்கு அறிமுகமான முகங்களை நிறுத்தி வெற்றியை உறுதி செய்ய கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.

கோட்டை மாறாத தலைவர்கள்: எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, டி. ஜெயக்குமார் போன்ற முன்னணி தலைவர்கள் தங்களது செல்வாக்கு மிக்க தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிடுகின்றனர்.

தொகுதி மாற்றம்: முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரம் தொகுதியிலிருந்து மாற்றப்பட்டு மயிலம், அதேபோல, தொகுதியில்ராஜபாளையத்தில் போட்டியிட்ட ராஜேந்திர பாலாஜி சிவகாசியிலும், போளூரில் போட்டியிட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலசப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.

​தேர்தல் கூட்டணி நிலவரம்:

​அதிமுக தலைமையிலான கூட்டணியில் (NDA) தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது:

  • அதிமுக: 178 இடங்கள்
  • பாஜக: 27 இடங்கள்
  • பாமக: 18 இடங்கள்
  • அமமுக: 11 இடங்கள் (தற்போது வரை)

 மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக அடுத்தடுத்த கட்டங்களாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.