2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இழுபறிக்குப் பின் இணக்கம்:

விசிக தரப்பில் முதலில் 12 தொகுதிகள் கேட்கப்பட்டது, பின்னர் “இரட்டை இலக்க” (குறைந்தபட்சம் 10) தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால், புதிய கட்சிகளின் வருகை மற்றும் திமுக அதிக இடங்களில் போட்டியிட விரும்புவதால், விசிக-விற்கு 8 இடங்கள் வரை ஒதுக்க திமுக முன்வந்து, தொகுதி பங்கிட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.

இந்த முறை 2 அதிகமாக..

6 தனித் தொகுதிகள்; 2 பொதுத்தொகுதிகள் என கடந்த முறையை விட 2 தொகுதிகளை அதிகமாக, திமுக கூட்டணியில் விசிக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விசிக திமுகவிடம் கொடுத்துள்ள உத்தேச தொகுதி பட்டியல்..,

  • செய்யூர்
  • நாகை
  • புவனகிரி
  • அரூர்
  • காட்டுமன்னார்கோவில்
  • கள்ளக்குறிச்சி
  • குன்னம்
  • மயிலம்
  • பெரியகுளம்
  • சிவகங்கை
  • வானூர் அல்லது திண்டிவனம்
  • கே.வி.குப்பம்