ராமதாஸ் – சசிகலா திடீர் கூட்டணி அமைத்து 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளனர். இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கடந்த மார்ச் 10ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசினார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ராமதாஸ் – சசிகலா சந்திப்பு மற்றும் கூட்டணி குறித்த செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

திடீர் சந்திப்பு – பரபரப்பான அரசியல் களம்:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா, கடந்த மார்ச் 10ஆம் தேதி தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பு, தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பமாகக் கருதப்பட்டது.

புதிய கட்சி:
சசிகலா அண்மையில் “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என்ற புதிய கட்சியைத் தொடங்கி, அதன் சின்னமான “தென்னந்தோப்பு” சின்னத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

திடீர் கூட்டணி – சின்னம்மா உடன் ஐயா
சசிகலா தலைமையிலான “அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” மற்றும் ராம்தாஸ் தலைமையிலான “பாட்டாளி மக்கள் கட்சி” வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இனணந்து கூட்டணி அமைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும், தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்படுத்தும் விதமாக இந்த கூட்டணி செயல்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த முடிவு?
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்துள்ள நிலையில், ராமதாஸ் மற்றும் சசிகலா இடையிலான இந்த நெருக்கம் பாமக-விற்குள் ஒரு பிளவை அல்லது மாறுபட்ட அரசியல் நகர்வைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
விஜய்யை சேர்க்கும் முயற்சி?
இவர்கள் இருவரும் இணைந்து ஒரு வலுவான “புதிய அணியை” உருவாக்க முயற்சிப்பதாகவும், இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) இணையக்கூடும் என்றும் வதந்திகள் பரவின.
தொகுதி பங்கீடு எப்படி..?
மேலும், தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப்பூர்வமான தேர்தல் அறிக்கை குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.






