September 10, 2026

முடிந்தது தொகுதி பங்கீடு: தமிழகத்தில் பாதி தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக – மீதம் தான் கூட்டணி கட்சிகளுக்கே!

அதிமுக-பாஜக கூட்டணியின் உத்தேச தொகுதி பங்கீடு விபரம் வெளியாகியுள்ளது.

அதிமுக கட்சிக்கு 163 சட்டமன்றத் தொகுதிகளும்; புரட்சிபாரதம் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. புரட்சி பாரதம் கட்சி ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு

மேலும், நயினார் நாகேந்திரன் தலைமையிலான தமிழக பாஜக கட்சிக்கு 31 சட்டமன்றத் தொகுதிகளும்;
“தாமரை சின்னத்தில்” போட்டியிட உள்ள புதிய நீதிக்கட்சி- 2, ஐஜேக-2, பார்வேர்ட் ப்ளாக்- 1, பெருந்தலைவர் மக்கள் கட்சி- 1,  தமமுக – 2, புதிய தமிழகம் – 2 ஆகிய கணக்கில் சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

அதனை தொடர்ந்து, குக்கர் சின்னத்தில் போட்டியிடும் அமமுக – 9 தொகுதிகள்; தமாக – 4 தனிச்சின்னம், பாமக – 17 மாம்பழம் சின்னத்தில் போட்டியிட உள்ளது என்று டிசி ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

டெல்லியில் முகாமிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் மேற்கண்ட பட்டியலை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

You may have missed