அதிமுக-பாஜக கூட்டணியின் உத்தேச தொகுதி பங்கீடு விபரம் வெளியாகியுள்ளது.
அதிமுக கட்சிக்கு 163 சட்டமன்றத் தொகுதிகளும்; புரட்சிபாரதம் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. புரட்சி பாரதம் கட்சி ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு
மேலும், நயினார் நாகேந்திரன் தலைமையிலான தமிழக பாஜக கட்சிக்கு 31 சட்டமன்றத் தொகுதிகளும்;
“தாமரை சின்னத்தில்” போட்டியிட உள்ள புதிய நீதிக்கட்சி- 2, ஐஜேக-2, பார்வேர்ட் ப்ளாக்- 1, பெருந்தலைவர் மக்கள் கட்சி- 1, தமமுக – 2, புதிய தமிழகம் – 2 ஆகிய கணக்கில் சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
அதனை தொடர்ந்து, குக்கர் சின்னத்தில் போட்டியிடும் அமமுக – 9 தொகுதிகள்; தமாக – 4 தனிச்சின்னம், பாமக – 17 மாம்பழம் சின்னத்தில் போட்டியிட உள்ளது என்று டிசி ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
டெல்லியில் முகாமிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் மேற்கண்ட பட்டியலை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






