தேசிய ஜனநாயக கூட்டணி விஜய்யின் தமிழக வெற்றி கழகம் இணைய வேண்டும் என இயக்குநர் மோகன்.ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக – பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கட்சிகள் இன்னும் இணையாமல் ஒன்று உள்ளது. திமுக கூட்டணிலோ! மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக கமலின் மக்கள் நீதி மய்யம் என வலுவான கூட்டணியாக உள்ளது.
மற்றொரு பக்கம், விஜய்யின் தவெக NDA கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் மோகன். ஜி, தனது எக்ஸ் தள பதிவில், “கொள்கை கூட்டணி என பார்க்காமல் தேர்தல் கூட்டணி என பார்க்க வேண்டும்.. வெற்றி ஒன்றே இலக்காக தெரிய வேண்டும்.. இருக்கும 10 ஓட்டில் இட்லிக்கு 3 ஓட்டும், தோசைக்கு 3 ஓட்டும், உப்புமாவுக்கு மீதம் 4 ஒட்டு விழுந்தால் காலம் முழுக்க நமக்கு உப்புமா தான்.. இதை கருத்தில் கொண்டு துணை முதல்வராகவே அல்லது எதிர்கட்சி தலைவராகவே முதல் தேர்தலிலேயே நல்ல வாய்ப்பு அமைகிறது.. NDA வுடன் இணைந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் தாவெக கட்சியினர்.. இல்லனா ஓட்டு வரும் ஆனா சீட்டு வராது.” என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் மோகன்.ஜி பாஜக மற்றும் பாமக கட்சிகளின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.






