விமான பயணத்தின் போது, விமான பணிப்பெண்ணிடம் சில்மிசம் செய்த திமுக கவுல்சிலர், கட்சியை விட்டு நீக்கி திமுக பொருளாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

போதையில் தகராறு

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கடந்த மாதம் 25ஆம் தேதி டெல்லிக்கு இண்டிகோ நிறுவன விமானம் சென்றது.

அதில் பயணம் செய்த 2 பேர் செம மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை விமான பணிப்பெண் இருக்கையில் அமருமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது போதையில் இருந்த 2 பேரும் விமான பணிப்பெண்ணிடம் ஒருகையில் தகாத வார்த்தைகளில் பேசி திட்டியதாக குற்றச்சாட்டப்படுகிறது.

விமான பணிப்பெண், மதுரை என கூறியபோது, மதுரையில் ஆண்டிப்பட்டியா, கல்லுப்பட்டியா? என்று கூறி கிண்டல் அடித்துள்ளனர். மேலும் பணிப்பெண்னை இருவரும் ஒருமையில் அழைத்து அத்துமீறியதாக கூறப்படுகிறது.

போலீசாரிடம் புகார்

இது தொடர்பாக விமான பணிப்பெண் மீனம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கைது – கட்சியை விட்டு நீக்கம்

புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் திருவள்ளூர் 6-வது வார்டு திமுக கவுன்சிலர் பிரபாகரன், அவரது நண்பர் தியாகு இருவரும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. விசாரணைக்காக அழைத்தபோதும் அவர்கள் ஆஜராகாமல் இருந்த நிலையில், டெல்லிக்கு சுற்றுலா சென்று விட்டு சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் வைத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விமானப்பணிப்பெணிடம் அத்துமீறியதால் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரபாகரனை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்து துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் திமுக கவுன்சிலர் பெண் விசயத்தில் சிக்கியுள்ளது, எதிர்க்கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் சாதகமாக அமைந்துள்ளது.