வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திமுக தலைமை, தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளால் வைகோ அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிருப்தியில் வைகோ!
வரும் தேர்தலில் 6 தொகுதியில் போட்டியிட வேண்டும், அதுவும் தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தீர்க்கமாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், 6 சீட் என்றால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம், தனி சின்னம் என்றால் வெறும் 3 சீட் தான் கொடுக்க முடியும் என திமுக தலைமை நிபந்தனை விதிப்பதாக கூறப்படுகிறது. எனவே, திமுக இப்படி “பிடி கொடுக்காமல் இருப்பதால் வைகோ கடும் அதிருப்தியில் இருப்பதாக” தகவல் வெளியாகி உள்ளது.
தனிச்சின்னம் – வெற்றி!
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டது தொகுதியில் போட்டியிட்ட துரைவைகோ தனிச் சின்னமான “தீப்பெட்டி” சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்யசபா சீட்?
மேலும் திமுக கூட்டணியில் ஒரு ராஜ்யசபா சீட்டும், மதிமுக தரப்பில் கேட்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.






