தமிழக அரசியலில் யாரும் எதிர்ப்பாராத விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார். இதுதான் இன்று அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

அதிமுக எம்எல்ஏ பதவி?
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் “இரட்டை இலை” சின்னத்தில் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஓ.பன்னீர்செல்வம். தற்போது அந்தப் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வத்துடன் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன்; ஓபிஎஸ் மகன் இரவீந்தர் ஆகிய மூவரும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

வரவேற்ற முதல்வர்
திமுகவின் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஸ்டாலின் ஆரதழுவி வரவேற்றார்.
ஓ. பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் திமுகவில் இணைந்தது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது.
ஓபிஎஸ் திமுகவில் இணைவது திமுக கூட்டணிக்கு பெரும்பலமாக அமைந்துள்ளது. இதனால் அதிமுக – பாஜக கூட்டணிக்கு மேலும் சரிவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.


மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில், ஓபிஎஸ் திமுக-வில் இணைந்தது குறித்து முதல்வர் ஸ்டானிங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!” என்று தனது பதிவில் முதல்வர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் 3 முறை முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் இன்று திமுகவின் உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து திமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகறது.






