​விமான டிக்கெட் முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் அதை ரத்து செய்தாலோ அல்லது தேதியை மாற்றினாலோ விமான நிறுவனங்கள் எந்தவிதமான அபராதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

பயணிகளின் நலன் கருதி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும், மார்ச் 26
ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

​முக்கிய நிபந்தனைகள்:

​உள்நாட்டுப் பயணம் (Domestic):
விமானம் புறப்படுவதற்கு குறைந்தது 7 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
​சர்வதேசப் பயணம் (International): விமானம் புறப்படுவதற்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
​இந்தச் சலுகை விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக நேரடியாகப் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ரீபண்ட் (திரும்ப பெறுதல்) நடைமுறைகள்:-

டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், பணத்தை எவ்வளவு நாட்களுக்குள் திரும்ப வழங்க வேண்டும் என்பதில் கடுமையான கெடு விதிக்கப்பட்டுள்ளது:
கிரெடிட் கார்டு: 7 வேலை நாட்களுக்குள் பணம் திரும்ப வர வேண்டும்.
நேரடி ரொக்கம் :- விமான நிறுவன அலுவலகத்தில் உடனடியாகத் தரப்பட வேண்டும்.

ஏஜெண்ட் / போர்ட்டல்: டிராவல் ஏஜெண்ட் மூலம் பதிவு செய்திருந்தாலும், 14 வேலை நாட்களுக்குள் ரீபண்ட் செய்யப்படுவதை விமான நிறுவனமே உறுதி செய்ய வேண்டும்.

மற்ற முக்கிய மாற்றங்கள்

பெயர் திருத்தம்: டிக்கெட்டில் பெயர் பிழை இருந்தால், முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் இலவசமாகத் திருத்திக் கொள்ளலாம்.
மருத்துவ அவசரநிலை: பயணி அல்லது உடன் பயணிப்பவருக்கு மருத்துவ அவசரநிலை (மருத்துவமனையில் அனுமதி) ஏற்பட்டால், முறையான ஆதாரங்களுடன் டிக்கெட்டை ரத்து செய்து முழுப் பணத்தையோ அல்லது ‘கிரெடிட் ஷெல்’ (Credit Shell) வசதியையோ பெறலாம்.

கட்டண உச்சவரம்பு:

எந்தக் காலத்திலும் ரத்துக் கட்டணம் என்பது டிக்கெட்டின் அடிப்படை விலை மற்றும் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.