தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையேயான சண்டையால் பாமக நிர்வாகங்கள், தொண்டர்கள் பெரிதும் பாதிப்படைந்ததுடன், குழப்பத்தில் உள்ளனர்.

பாமக வின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்ப டுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக்கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனு மீது அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முடியாத தந்தை-மகன் சண்டை

பாமகவில் தந்தை-மகன் இடையே ஏற் பட்ட மோதல் காரண மாக கட்சி இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பாமகவின் பெயர், கொடி மற் றும் சின்னத்தை பயன்படுத்த அன் புமணிக்கு தடை விதிக்கக்கோரியும், கட்சியின் தலைவராக தம்மை அறிவிக் கக்கோரியும் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏற்கனவே வே இதேபோல் தொடரப்பட்ட தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் – வழக்கை நீதிமன்றம் சம்மந்தப் பட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணு குமாறு உத்தரவிட் டுள்ளது.

பதிலளிக்க உத்தரவு

எனவே, பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சியின் உள் விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில்தான் நிவாரணம் பெற முடியும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரியும், தன்னை கட் சியின் தலைவராக அறி விக்க கோரியும் ராம்தாஸ் தாக்கல் செய்த மனு சென்னை 13வது உரிமை யியல் நீதிமன்றத்தில் நீதி பதி எம்.தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு குறித்து அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

தமிழகத்தில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் இதுபோன்ற வழக்குகளால் பாமக கட்சிக்குதான் பின்னடைவு என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.